வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஜூலை 2018 (18:28 IST)

சுஷ்மா சுவராஜ் பிரதமர் பதவியை தட்டிப்பறித்த மோடி: ப.சிதம்பரம்

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ப.சிதம்பரம், 2014ஆம் சுஷ்மா சுவராஜ் பிரதமராகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறித்து தெரிவித்துள்ளார். அதில், சுஷ்மா சுவராஜ்தான் 2014ஆம் ஆண்டில் பிரதமராகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
2009 - 2014ஆம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் அப்போதே பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார். ஆனால், 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி தோல்வியை கண்டனர். 
 
அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது பணிகளை சிறப்பாக செய்து வருவகிறார். உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள்தான் தேவை என்று ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.