வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (12:46 IST)

ராஜீவ் காந்தியை போல் மோடியையும் கொலை செய்ய சதி; உள்துறை அமைச்சகம் பிரமருக்கு அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதால், கவனமாக இருக்க அவரிடம் உள்துறை அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு பாதுகாப்பு கவுன்சில் புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
மோடியின் உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மோடி சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
 
மோடியின் அருகே அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அனுமதிக்க கூடாது. மோடியின் பாதுகாப்புக்கு புதிய வழிமுறைகள் மற்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதமர் பொதுமக்கள் சந்திப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிரதமருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. அதனால் கவனமாக இருக்க அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புனே காவல்துறையினரால் கைப்பற்ற கடிதத்தில்,  ராஜீவ் காந்தியை போல் பிரதமர் மோடியையும் பொதுக்கூட்டத்தில் கொலை செய்ய மாவோயிஸ்ட் திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
இதனால் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.