வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (18:57 IST)

தென்கொரிய அதிபருடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் மூன் ஜே- இன்வுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்.

 
 
தென்கொரிய அதிபர் மூன் ஜே- இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இவருக்கு இந்தியா சார்பில் மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இவர் இன்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரை சந்தித்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.
 
இதைத்தொடர்ந்து இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை திறந்துவைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணித்துள்ளார்.