திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்
திமுக அல்லது அதிமுக அல்லது இரண்டு கட்சிகளும் பலவீனமடைந்தால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். இந்த கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் விரைவில் கனியும், ஆனால் தற்போது அதற்கான சூழல் அமையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். திராவிட கட்சிகளான திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் ஒன்று பலவீனப்பட்டாலோ, இரண்டும் பலவீனப்பட்டாலோ தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கோரிக்கை வலுப்படும் என்றும் அவர் கூறினார்.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை தற்போது சில முரண்பாடுகள் இருந்தாலும், கொள்கை அடிப்படையில் ஒருமித்த பார்வை இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டணி வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதிமுகவுக்கு இடையே கூட்டணி அமைந்தால், அது கொள்கை அடிப்படையிலிருக்காது என்றும், பொருந்தாத கூட்டணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva