வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 ஜூலை 2018 (14:18 IST)

மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

 
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நொட்டீஸ் கொடுக்கப்பட்டது.
 
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இன்று விவாதம் நடத்த முடியாது ஆனால் இதுகுறித்து விவாதம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியினர் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு முயற்சித்ததும், அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.