நேபாள வெள்ளத்திற்கு இந்தியாவும், சீனாவும்தான் பொறுப்பு!.. நேபாள அமைச்சர் கோபம்!..
நேபாளத்தை ஒட்டியுள்ள திபெத் - சீன பகுதியில் திடீரென உருவான பனிப்பாறை ஏரி ஒன்று உடைந்து அதிலிருந்து நீர் வேகமாக வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள நான்கு ஊர்களில் வேகமாக பாய்ந்தது. அப்போது வழியில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், கார் மற்றும் கனரக வாகனங்கள் என பலவற்றையும் அந்த வெள்ளம் அடித்து சென்றது..
அந்த வெள்ளத்தில் மனிதர்களும் பலரும் சிக்கினார்கள். வீட்டில் இருந்தவர்கள் மண்ணில் புதைந்து போனார்கள்.. இதுவரை இந்த விபத்தில் 1000 பேருக்கு மேல் பலியாகிவிட்டனர். 4 ஆயிரம் பேருக்கு மேல் காணவில்லை என்று நேபாள அரசு அறிவித்திருக்கிறது...
யார் என அடையாளம் தெரியாத சடலங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் நேபாள அரசு புதைத்து விட்டது. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உடைந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது.. இதற்கு உயர்ந்த வெப்பநிலையும் ஒரு காரணம்.. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெளியேறிய கார்பன் உமிழ்வு காரணமாகவே பனிப்பாறைகள் உடைந்தது என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிசிக் கனால் நேபாளத்திற்கு பிற நாடுகளில் இருந்து நிதி கேட்பதற்கு பதில் நீதி கேட்பதுதான் முக்கியம்.. நேபாளம் வெள்ளப்பெருக்கு பாதிப்புக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியது வல்லரசு நாடுகளின் பொறுப்பு..
உலகிலேயே மிகப்பெரிய கார்பன் உமிழ்வு நாடுகளான அமெரிக்கா, இந்தியா சீனா இதற்கு பொறுப்பேற்பதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும்.. உலகளாவிய காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.. எனவே காலநிலை மாற்றத்தின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.