1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay announced new secretariat in chennai

ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம்!.. முதல்வர் விஜய் அறிவிப்பு...

joseph vijay
இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் விஜய் ‘மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாகத் தேவையை கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவிருக்கிறது.. சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை அடங்கிய புதிய கட்டட வளாகம் கட்டப்படும்..

அனைத்து துறைகளும் இருக்கும் வகையில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்கப்படும்.
சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 கோடி மதிப்பில் தலைமைச் செயலகம் உருவாக்கப்படும். தீயணைப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவாக வசதிகள் செய்யப்படும்.

பசுமை கட்டட தர நிலைக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகமாக தலைமைச் செயலகம் உருவாக்கப்படும்.400 ஆண்டுகள் ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக மையமாக ஆட்சி அடையாளமாக ஜார்ஜ் கோட்டை செயல்பட்டு வருகிறது.. ஆனால் 120 ஏக்கர் பரப்பு கொண்ட வளாகத்தில் தலைமை செயலாக பயன்பாட்டுக்கு வெறும் 4 ஏக்கர்கள் மட்டுமே உள்ளது’ என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரேசன் கடைகளில் இன்று முதல் வெங்காயம் விற்பனை.. கிலோ ரூ.35 மட்டுமே...