செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (12:06 IST)

யோ யோ டெஸ்டில் கலக்கிய யுவராஜ்; தென்ஆப்பரிக்காவுடனான ஒருநாள் போட்டியில் களமிறங்குவாரா?

வெகு நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்த யுவராஜ் சிங் ஒருவழியாக தற்போது யோ யோ தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். வெகு நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போராடி வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில் தற்போது யோ யோ டெஸ்டில் கலந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் யுவராஜ், தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். 
 
இலங்கையுடன் விளையாடி வரும் இந்திய அணி அடுத்து அடுத்து தென் ஆப்பரிப்பாகா செல்கிறது. அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. தென் ஆப்பரிக்கா தொருக்கான டெஸ்டில் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
தற்போது யுவராஜ் சிங் யோ யோ டெஸ்டில் வெற்றிப்பெற்று இந்திய அணியில் விளையாட தகுதியுடன் உள்ளார். தென் ஆப்பரிக்கா தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.