செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (13:10 IST)

முந்நூறை மிஸ் செய்த விராட் கோஹ்லி

டெல்லியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதத்தை அசால்ட்டாக தாண்டி முந்நூறு ரன்களை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் அவர் 243 ரன்களில் அவுட்டானார்.

விராத் கோஹ்லியை அவுட் செய்ய இலங்கை பந்துவீச்சாளர்கள் பல உத்திகளை கையாண்டும் எதுவும் பலிக்காத நிலையில் 125வது ஓவரை வீசிய சண்டகன் பந்தில் அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

இந்த நிலையில் இந்திய அணி சற்றுமுன் வரை 7 விக்கெட்டுக்கள் இழப்பி\ற்கு 523 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருக்கும் பட்சத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.