வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (14:54 IST)

சோகத்தில் முடிந்த இலங்கை அணி போட்ட டிராமா

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 500ஐ தாண்டியது.

இந்த நிலையில் காற்று மாசு காரணமாக தங்களால் மைதானத்தில் விளையாட முடியவில்லை என இலங்கை வீரர்கள் டிராமா போட்டனர். இதனால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மாஸ்க் அணிந்து விளையாடினர்.

மைதானத்தில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் உள்பட யாருமே மாஸ்க் அணியாத நிலையில் இலங்கை வீரர்கள் மட்டுமே மாசு என்ற டிராமை நடத்தினர். இதனால் கடுப்பான விராத் கோஹ்லி 536 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தார்

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை இலங்கை அணியினர் விளையாடினர். இலங்கை வீரர்கள் போட்ட டிராமாவுக்கு தண்டனையாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே ஷமியின் பந்தில் அவுட் ஆனார். மேலும் போட்டியின் 5வது ஓவரில் டிசில்வா ஒரு ரன்னில் அவுட் எல்பிடபியூ முறையில் அவுட் ஆனார். த|ற்போது இலங்கை அணி 10 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.