வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (09:44 IST)

இதனால்தான் கோலி சிறந்த கேப்டன்… ஷமி விஷயத்தில் பம்மிய ரோஹித்தை டிரோல் செய்யும் ரசிகர்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போடி டிராவில் முடிவடைந்த இந்த ஆட்டத்தின் போது, ​​அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி இந்திய கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியிடம் “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பினர்.

இப்போது இதுபற்றி பேசியுள்ள இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா  “ஷமியிடம் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் கூறியுள்ளார். ரோஹித் ஷர்மாவின் இந்த பொறுப்பற்ற பதில் ரசிகர்களையும் மதச்சார்பற்றவர்களையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோற்றபோது இதே போல சிலர் முகமது ஷமியை மத ரீதியாக தாக்கி பேசினார்கள். அப்போது கேப்டனாக இருந்த கோலி, ஷமிக்கு ஆதரவாக “மதத்தை முன்வைத்து ஒருவரை தாக்கிப் பேசுவது பரிதாபத்துக்குரிய செயல். அப்படி முதுகெலும்பில்லாத சிலருக்கு தனிப்பட்ட நபரை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. மதம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் தனிப்பட்ட நம்பிக்கை” எனக் கூறியுள்ளார். ஒரு கேப்டனாக கோலி, தன் அணி வீரருக்கு சாதகமாக இப்படி பேசி இருந்தார். அதை குறிப்பிட்டு ரசிகர்கள் ரோஹித் ஷர்மாவை இப்போது ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.