வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2025 (12:52 IST)

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அவர் கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு சூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் முறையாக WTC இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் பேட் கம்மின்ஸ் இடம்பெறுவது சந்தேகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு முழங்கையில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அது சம்மந்தமாக அவருக்கு விரைவில் ஸ்கேன் செய்யப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.