செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:32 IST)

சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் சுப்மன் கில்!

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் கோப்பையை வெல்ல பெரியளவில் உதவினார். இந்த சீசனில் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்திருந்தார். 

இந்நிலையில் இப்போது அவர் அந்த அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதளப் பக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி “நினைவுகொள்ளத்தக்க பயணம். அடுத்த முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று கூறியுள்ளது. ஆனால் ஏன் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.