1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. BCCI plans to sack odi captaincy from Rohith sharma

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சாம்பியன்ஸ் கோப்பை
சமீபகாலமாக இந்திய அணியின் மூத்த வீரரான ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி நிலையானதாக இல்லை. பத்து இன்னிங்ஸ்கள் சொதப்பினால் ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடுகிறார். இதன் காரணமாகவே அவர் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். ஒரு நாள் அணிக்கு அவர் கேப்டனாகவும் செயல்படுகிறார். ஆனால் அவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பிடுங்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடர் வரை அவர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொடருக்காகப் புதிய கேப்டனை உருவாக்கி அணியை நிலைபெற செய்யவேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!