1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:38 IST)

ஐபிஎல் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக தெ.ஆ. முன்னாள் வீரர் நியமனம்

IPL
ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை அணிக்கு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் டி20 உலக கோப்பை தொடருடன் பதவியிலிருந்து விலகி அதன்பின் ஐபிஎல் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.