வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (18:52 IST)

ஸ்மிருதி மந்தனாவை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

2021 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை குறித்த அறிவிப்பு பிசிசிஐ அறிவித்துள்ள  நிலையில் முன்னாள் வீரர் சச்சின், ஸ்மிருதி மந்தனாவை பாராட்டியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் ஆக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஐசிசி வெளியிட்ட சிறந்த டி20 அணியில் ஸ்மிருதி இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற பட்டமும் கிடைத்துள்ளது என்பதும் ஐசிசி இந்த கௌரவத்தை அவருக்கு அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தனா 76 டெஸ்டுகள் 106 ஒருநாள் போட்டிகள் மற்றும் 40 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீராங்கனையாக விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுமார் 4000 ரன்கள் வரை அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இந்திய வீராங்கனை ஸ்மிருது மந்தனாவை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில்  பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்ததாக  அமைய வாழ்த்துகள் எனவும்,  புதிய சாதனைகளைப் படைத்து புதிய உயரங்களைத் தொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.