ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!
கவுகாத்தியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
 
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சால் 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
154 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா, வெறும் 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்களும் குவித்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். 
 
இதன் மூலம், சர்வதேச டி20 வரலாற்றில் 150-க்கும் மேற்பட்ட ரன்களை மிகக்குறைந்த ஓவர்களில் துரத்தி பிடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
 
மேலும், 25 பந்துகளுக்குள் அதிக அரைசதங்கள் அதாவது 9 முறை விளாசிய வீரர்கள் என்ற சாதனையை அபிஷேக் மற்றும் சூர்யகுமார் இணைந்து சமன் செய்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆட்டநாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.
 
Edited by Siva