1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஜனவரி 2026 (12:56 IST)

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்
இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் விளையாட்டு சிக்கல் உருவாகியுள்ளது. 
 
இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணியை தொடரிலிருந்து நீக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் , அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியை சேர்த்துள்ளது. ஐசிசியின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேசத்திற்கு ஆதரவாக தானும் தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி இது குறித்து பேசுகையில், "பாகிஸ்தானும் வங்கதேசமும் சகோதர நாடுகளை போல புதிய பந்தத்தில் இணைய இருக்கிறோம். ஐசிசியின் முடிவால் நமக்கு நிதி இழப்பு ஏற்பட்டாலும், வங்கதேசத்துடனான உறவுதான் முக்கியம். பிரதமர் நாடு திரும்பியதும் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 
 
1971 போருக்குப் பிறகு அரசியல் ரீதியாக விலகியிருந்த இரு நாடுகளும், தற்போது இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் விவகாரத்தில் கைகோர்த்திருப்பது சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
 
Edited by Siva