கங்குலி உலகக்கோப்பை வென்ற கேப்டனா? கோலிக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி வலுக்கட்டாயமாக விலக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கும் பிசிசிஐ நிர்வாகத்துக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு இப்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. கோலியின் ஒரு நாள் கேப்டன்சி பிடுங்கப்பட்ட நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக ரசிகர்கள் பிசிசிஐ நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கோலிக்கும் கங்குலிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கோலிக்கும் கங்குலிக்கும் இடையிலான தகவல் தொடர்பு பற்றி எனக்கு தெரியவில்லை. அவர்கள் இருவரிடம் நான் பேசவில்லை. உலகக்கோப்பை வெல்வதுதான் நல்ல கேப்டனுக்கான அடையாளம் என்றால் கங்குலி உலகக்கோப்பை வென்றவரா? கவாஸ்கர், சச்சின், டிராவிட் யாருமே வெல்லவில்லை. கபில்தேவ் மற்றும் தோனி இருவர் மட்டும் வென்றுள்ளனர். அதனால் மற்றவர்கள் எல்லாம் நல்ல வீரர்கள் இல்லை என்று ஆகுமா?. ஒரு வீரர் நேர்மையாக விளையாடுகிறாரா என்று பார்த்துதான் எடைபோடவேண்டும் எனக் கூறியுள்ளார்.