செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (16:06 IST)

கழுத்தில் தாக்கிய பவுன்ஸர்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரு பிளட்சர் இப்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் விளையாடி வருகிறார்.

குல்னா டைகர்ஸ் அணிக்காக ஆடிவரும் அவர் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த போது ரஹ்மான் ராஜா வீசிய பவுன்சரை புல் ஷாட் ஆட முற்பட்டார். ஆனால் பந்து அவரின் கழுத்தில் தாக்கியது. இதில் அவர் வலியால் துடிக்க, மைதானத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவர் நலமாக இருக்கிறார் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இப்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.