1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (10:01 IST)

தோனியிடம் கற்றதைதான் செயல்படுத்துகிறேன்… ருத்துராஜ் கெய்க்வாட் பதில்!

இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். நேற்று அவர் 20 ரன்கள் சேர்த்த போது ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 4000 ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கடந்த போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற ருத்துராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிறப்பாக விளையாடுவது பற்றி பேசியுள்ள ருத்துராஜ் “சிஎஸ்கே அணி மற்றும் தோனியிடம் கற்றதைதான் இப்போது செயல்படுத்துகிறேன். தோனியிடம்தான் ஒரு போட்டியை எப்படி அணுகவேண்டும் என கற்றுக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.