1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (07:30 IST)

கோலி, ராகுல் ஆகியோரின் சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்த ருத்துராஜ்!

இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார்.  இதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். நேற்று அவர் 20 ரன்கள் சேர்த்த போது ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 4000 ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதை அவர் 116 இன்னிங்ஸ்களில் படைத்தார். இந்திய வீரர்களான கே எல் ராகுல் இதை 117 இன்னிங்ஸ்களிலும், கோலி 138 இன்னிங்ஸ்களிலும் படைத்திருந்தனர். அவர்களின் சாதனையை முறியடித்து அதிகவேகமாக 4000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் 107 இன்னிங்ஸில் 4000 ரன்களை சேர்த்து முதல் இடத்தில் உள்ளார்.