திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (07:32 IST)

ஐபிஎல் 2024: மார்ச் 22 ல் முதல் ஆட்டம்… சி எஸ் கே அணியோடு மோதப்போவது கோலி அணியா?

உலகக் கோப்பை ஜுரம் சமீபத்தில் அடங்கிய நிலையில் இப்போதே அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் சீசன் பற்றிய பேச்சுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதற்குக் காரணம் இந்த மாதத்தில் நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலம்தான்.

கடந்த ஆண்டு சி எஸ் கே சாம்பியன் ஆன நிலையில் அடுத்த சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் என்பது உறுதி. இதனால் கடந்த ஆண்டு ரன்னர் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் முதல் போட்டியில் விளையாடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.