அமெரிக்க மைதானங்கள் மேல் அதிருப்தியில் இருக்கிறதா இந்திய அணி?... ராகுல் டிராவிட் புகார்!
ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி கிளம்பி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்னும் விராட் கோலி அமெரிக்கா செல்லவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்னும் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் சில இடங்களில் புயல் வீசிய நிலையில் சில மைதானங்கள் சேதம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மைதானத்தின் எல் இ டி ஸ்க்ரீன்களும் சேதமாகியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக மைதானங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகாரளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.