தொடர்புடைய செய்திகள்
- கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!
- இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!
- என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!
- தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
- பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!
களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் இருந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு அந்த அணி எப்போதுமே பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஒரு சமநிலையைப் பேணாததேக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இந்த முறை ஐபிஎல் தொடரை மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது பெங்களூரு. முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற வலுவான அணிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர் சி பி பெற்றுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ள அந்த அணிக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.7 மில்லியன் பாலோயர்களோடு உள்ளது.