வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 30 மே 2024 (08:47 IST)

சூர்யகுமார் & ஜடேஜாவுக்கு கிடைத்த கௌரவம்… ஐசிசி வழங்கிய விருதுகள்!

ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி அமெரிக்காவுக்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இரண்டு வீரர்களுக்கு ஐசிசி விருதுகள் கிடைத்துள்ளன.

2023 ஆம் ஆண்டு இரண்டு சதம், ஐந்து அரை சதம் என மொத்தமாக 17 இன்னிங்ஸில் 733 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 48 ரன்கள் ஆகும். இதையடுத்து அவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி 20 வீரர் என்ற விருது ஐசிசியால் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி வீரர்களில் ஒருவராக ரவீந்தர ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு விருதுகளும் அமெரிக்காவில் இருக்கும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.