1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 மே 2024 (11:05 IST)

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

India Pakistan
அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு தீவிரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 போட்டிகளை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகிறது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், அரையிறுதி, இறுதி போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளில் பிரிவுக்கு 5 அணிகள் என மொத்தம் 20 அணிகள் இந்த போட்டிகளில் மோதிக் கொள்கின்றன.

இதில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் இந்த போட்டிக்கு மற்ற போட்டிகளை விட கூடுதல் பாதுகாப்பை வழங்க நியூயார்க் போலீஸ் முடிவு செய்துள்ளது.

Edit by Prasanth.K