திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 30 மே 2024 (08:47 IST)

விராட் கோலியை விமர்சித்தால் உங்களுக்கு கொலை மிரட்டல் வரும்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலமாக அனைத்துத் தொடர்களிலும் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறார். ஆனாலும் அவரிருக்கும் அணி தொடர்ந்து தோற்று வருகிறது. சமீபத்தைய ஐபிஎல் தொடரில் அவர் 700க்கும் மேற்பட்ட ரன்களைப் பெற்று ஆரஞ்சு தொப்பியை பெற்றார். ஆனால் பெங்களூர் அணி ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறியது. இது சம்மந்தமாக கோலி மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் அவர் மிகச்சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது.  இந்நிலையில் விராட் கோலி குறித்து ஒரு தகவலை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் விராட் கோலியை எவ்வளவோ விஷயங்களுக்காக பாராட்டி இருக்கிறேன். ஆனால் நான் அவரைப் பற்றி எதாவது ஒரு குறையை விமர்சனம் செய்தால் அவரின் ரசிகர்களிடம் இருந்து எனக்குக் கொலை மிரட்டல் வரும். இத்தனைக்கும் நான் அவரை பலமுறை நேர்காணல் செய்துள்ளேன். அவரின் பல திறமைகளைப் பாராட்டி இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.