1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (09:59 IST)

ஐபிஎல் ஏலத்தில் மோஸ்ட் வாண்டட் ஆகப்போகும் ரச்சின் ரவீந்தரா… அடிப்படை விலை இவ்வளவுதானா?

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் கவனம் ஈர்த்த இளம்  வீரர்களில் ஒருவர் நியுசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா. 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 25 வயது நிரம்புவதற்குள் அதிக ரன்கள் அடித்த சாதனை சச்சின் வசம் இருந்தது. 1999 உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்து அவர் இந்த சாதனையை படைத்தார். நேற்று ரச்சின் ரவீந்திரா அடித்த ரன்கள் மூலம் இந்த இலக்கை தாண்டி சென்று சச்சின் சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் கவனிக்கப்படும் வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிசம்பரில் நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் அவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் சில பல கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.