ரச்சின் ரவீந்தராவுக்கு திருஷ்டி சுற்றிப் போட்ட பாட்டி!
இந்த உலக கோப்பை தொடரில் களம் இறங்கியது முதலாகவே சதம், அரைசதம் என விளாசி வரும் ரச்சின் இன்று நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார். ஆனால் அரை சதம் வீழ்த்துவதற்குள் ஆட்டமிழந்தார். எனினும் அந்த ரன்கள் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.
50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 25 வயது நிரம்புவதற்குள் அதிக ரன்கள் அடித்த சாதனை சச்சின் வசம் இருந்தது. 1999 உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்து அவர் இந்த சாதனையை படைத்தார். நேற்று ரச்சின் ரவீந்திரா அடித்த ரன்கள் மூலம் இந்த இலக்கை தாண்டி சென்று சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் முடிந்த போட்டிக்கு பிறகு தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார் ரச்சின் ரவீந்தரா. அங்கு சிறப்பாக விளையாடி வரும் ரச்சினுக்கு அவருடைய பாட்டி திருஷ்டி சுற்றிப் போட்டுள்ளார். ரச்சினின் பூர்விகம் பெங்களூருதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.