செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2023 (12:49 IST)

உலக கோப்பை போட்டியால் தேர்வுகள் ஒத்திவைப்பு! – பள்ளி நிர்வாகத்தை பாராட்டிய ரச்சின் ரவீந்திரா!

இன்று உலக கோப்பை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளதால் தேர்வுகளை ஒத்திவைப்பதாக பள்ளி நிர்வாகம் ஒன்று அறிவித்துள்ளதை நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா பாராட்டியுள்ளார்.



இன்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள உள்ள நிலையில் இந்தியா முழுவதும் மக்கள் இந்த போட்டிகளை காண வெகுவாக தயாராகி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த போட்டிகளை காண ஆவலாக உள்ள நிலையில் ஃபரியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நாளை 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது.

இன்று மாணவர்கள் பலரும் உலக கோப்பை போட்டிகளை காண ஆர்வம் காட்டி வருவதால் நாளை தேர்வுக்கு ஆயத்தமாக இயலாத சூழலை பள்ளி நிர்வாகத்திடம் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை ஏற்ற பள்ளி நிர்வாகமும் நாளை நடைபெற இருந்த தேர்வுகளை நாளை மறுநாள் ஒத்தி வைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதை சுட்டிக்காட்டி ட்விட்டர் எக்ஸில் பதிவிட்டுள்ள இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா மாணவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாமல் செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K