வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (16:17 IST)

விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!

Indian Cricket team
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால், இந்திய பவுலர்கள் நியூசிலாந்து விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
 நேற்று மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால், நியூசிலாந்து பவுலர்களின் நாபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டது. 
 
இதனை அடுத்து, நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது. நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன் கான்வே 76 ரன்களுடன், யங்  32 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குல்தீப் யாதவ் மட்டுமே ஒரே ஒரு விக்கெட்டை எடுத்துள்ள நிலையில், மற்ற பவுலர்களை விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் போராடி வருகின்றனர்."
 
 
Edited by Mahendran