செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2023 (19:02 IST)

இந்த வயசுல இவ்ளோ ரன்னா? சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா!

Rachin Ravindra
இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா தற்போது சச்சினின் இளவயது சாதனையை முறியடித்துள்ளார்.தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டிகள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இதில் பல நாட்டு வீரர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ரச்சின் ரவீந்திரா. நியூசிலாந்து நாட்டு இளம் வீரரான ரச்சின் இந்திய பூர்வீகத்தை கொண்டவர்.

இந்த உலக கோப்பை தொடரில் களம் இறங்கியது முதலாகவே சதம், அரைசதம் என விளாசி வரும் ரச்சின் இன்று நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார். ஆனால் அரை சதம் வீழ்த்துவதற்குள் ஆட்டமிழந்தார்.

எனினும் இன்று அடித்த ரன்கள் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 25 வயது நிரம்புவதற்குள் அதிக ரன்கள் அடித்த சாதனை சச்சின் வசம் இருந்தது. 1999 உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்து அவர் இந்த சாதனையை படைத்தார். இன்று ரச்சின் ரவீந்திரா அடித்த ரன்கள் மூலம் இந்த இலக்கை தாண்டி சென்று சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

Edit by Prasanth.K