1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (13:53 IST)

ரச்சின் ரவீந்திரா மீண்டும் சதம்.. 40 ஓவர்களில் 300ஐ தாண்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தான் திணறல்..!

Rachin Ravindra
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் சற்றுமுன் 41 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா 108 ரன்கள் எடுத்தார். அதேபோல் கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்துள்ளார். சற்றுமுன் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  அதே நேரத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்


Edited by Mahendran