செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2023 (07:03 IST)

நான் எங்கிருந்து வந்தவன் என்பது எனக்குத் தெரியும்… சச்சின் வாழ்த்தில் நெகிழ்ந்த கோலி!

நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த சதத்தின் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையான 49 சதங்களை சமன் செய்துள்ளார்.

இந்த சதத்தை அடித்தவுடனேயே சச்சின் கோலியை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். போட்டி முடிந்ததும் பேசிய கோலி “நான் ஹீரோவாக பார்த்து வளர்ந்தவரின் சாதனையை சமன் செய்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். அவர் எனக்கு வாழ்த்து அனுப்பியதைப் பார்த்தேன்.

சச்சின் போல என்னால் பேட்டிங் செய்ய முடியாது. அவருடன் என்னை ஒப்பிடுவதே தவறு.  நான் எங்கிருந்து யாரைப் பார்த்து கிரிக்கெட் விளையாட வந்தவன் என்பது எனக்கு தெரியும். நான் அவர் விளையாடிய போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது.  அவரிடம் இருந்து வாழ்த்து கிடைத்ததை பாக்கியமாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.