ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:55 IST)

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இஷாந்த் ஷர்மா விலகல்!!

நாளை நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு, சமீபத்தில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதிலிருந்து மீண்டு வந்த அவர், நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் இஷாந்த் ஷர்மாவுக்கு கணுக்காலில் மீண்டும் வலி ஏற்பட்டதால் அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இஷான் ஷர்மா, தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், தான் விரும்பியபடி தன்னால் பந்து வீச முடியவில்லை எனவும் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.