இலங்கையின் இரண்டு வீரர்கள் சதம்: 346 இலக்கை நோக்கி மே.இ.தீவுகள்

இலங்கையின் இரண்டு வீரர்கள் சதம்
Last Modified புதன், 26 பிப்ரவரி 2020 (19:05 IST)
இலங்கையின் இரண்டு வீரர்கள் சதம்
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது என்பதும், ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கியது

தொடக்க ஆட்டக்காரரான ஃபெர்னாண்டஸ் அதிரடியாக விளையாடி 127 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மெண்டிஸ் அதிரடியாக குவித்த 119 ரன்கள் காரணமாக இலங்கை அணியின் ஸ்கோர் 345 ரன்கள் ஆக உயர்ந்தது. ஒருநாள் போட்டியில் இலங்கையின் இரண்டு வீரர்கள் சதமடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 346 என்ற இமாலய இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது விளையாடி வருகிறது. அந்த அணி சற்றுமுன் வரை 5ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் இலங்கை அணி வென்றால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :