1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified புதன், 26 பிப்ரவரி 2020 (15:59 IST)

படமாகிறது கங்குலியின் வாழ்க்கை வரலாறு..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.

முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதே போல் கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றான “83” உருவாக்கத்தில் உள்ளது. மேலும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது படங்களும் தயாராகி வருகிறது.

இதன் வரிசையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் இயக்கவுள்ளார். கங்குலி வேடத்தில் ஹிரித்திக் ரோஹன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.