செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (09:01 IST)

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் முதல் போட்டியில் விளையாடாத ரோஹித் ஷர்மா இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. இது சம்மந்தமாகப் பேசியுள்ளா புஜாரா “ராகுலை டாப் ஆர்டரில் இருந்து மாற்றக் கூடாது. ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விரும்பினால் கே எல் ராகுல் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும். ஷுப்மன் கில் வந்தால் கூட அவரை ஐந்தாவது வீரராக விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.