திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (17:22 IST)

போட்டிக்கு முன்பே குத்தாட்டம் போட்ட இந்திய வீராங்கனை: வைரலாகும் வீடியோ

போட்டிக்கு முன்பே குத்தாட்டம் போட்ட இந்திய வீராங்கனை
மகளிருக்கான உலக கோப்பை டி20 போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியினர் மோதினர். இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய வீராங்கனை ரோட்ரிகஸ் வெறும் 10 ரன்கள் தான் எடுத்தார் ஆனாலும் அவர் இன்று உலகம் முழுவதும் வைரலாக பேசப்படுகிறார். இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் அவர் மைதானத்திற்கு வரும் போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் உடன் இணைந்து பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார்
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஐசிசியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது