புதன், 11 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 30 நவம்பர் 2024 (08:27 IST)

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவர் இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே போல ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.