ரோஹித் ஷர்மாவின் இன்றைய நிலைக்கு காரணம் அவர்தான்… கம்பீர் கருத்து!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மாவாக இப்போது இருப்பதற்குக் காரணம் தோனிதான். ரோஹித்தின் ஆரம்ப கால கட்டங்களில் அவர் தடுமாறிக் கொண்டிருந்த போது தோனிதான் அவரை ஆதரித்தார்” எனக் கூறியுள்ளார்.
ரோஹித் ஷர்மா பின் வரிசை வீரராக இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அவரை தொடக்க ஆட்டக்காரராக மாற்றி ஆடவைத்து அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதில் தோனியின் பங்கு முக்கியமானது.