1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2025 (11:41 IST)

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 
 
ஆனால் இந்திய அணியினர் வழக்கம்போல் சொதப்பியதின் காரணமாக, சற்று முன் வரை இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 168 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னணி பேட்ஸ்மின்களான ஜெய் ஸ்வால், கே. எல். ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரிஷப் பேண்ட் மட்டும் ஓரளவு தாக்குபடுத்தி 46 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 20 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது கேப்டன் பும்ரா மட்டுமே களத்தில் இருக்கிறார். அவருக்கு துணையாக சிராஜ் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் 3விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
 
Edited by Mahendran