46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் பும்ரா முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.
அதையடுத்து பேட் ஆடவந்த இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்களை இழந்து 57 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. விராட் கோலி களத்தில் உள்ளார். இந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரோஹித்ஷர்மா இடம்பெறவில்லை. அவரின் மோசமான ஆட்டத்திறனே அதற்குக் காரணம்.
போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் இந்திய அணிக்கு மகிழ்ச்சிகரமான மைதானம் அல்ல. இந்த மைதானத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியை வென்று 46 ஆண்டுகள் ஆகிறது. அதன் பிறகு 12 போட்டிகளில் விளையாண்ட போது 7 ட்ராக்களையும் 5 தோல்விகளையுமே பெற்றுள்ளது. அதனால் பும்ரா தலைமையிலான அணி அந்த மோசமான கரும்புள்ளி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.