185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற தற்காலிகக் கேப்டன் பும்ரா பேட் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி இந்த தொடர் முழுவதும் சொதப்புவது போலவே இந்த போட்டியிலும் சொதப்பியது. மூத்த வீரரான கோலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி ஆட்டம் கண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஆஸி அணி சார்பாக ஸ்காட் போலண்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை, கம்மின்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.