வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (10:07 IST)

ஷேன் வார்னே உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்! – ஆஸ்திரேலியா அறிவிப்பு!

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேயின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது

1990களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஆஸ்திரேலிய வீரர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே பந்து வீசும் லாவகத்தை காணவே பலரும் ஆர்வமாக இருப்பர்

உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஷேன் வார்னேயின் உடல் ஆஸ்திரேலியாவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.