வியாழன், 1 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (12:31 IST)

100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி! – சிறப்பு தொப்பி வழங்கிய பிசிசிஐ!

100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி! – சிறப்பு தொப்பி வழங்கிய பிசிசிஐ!
இன்றைய இந்திய டெஸ்ட் தொடரை சேர்த்து 100வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலியை பிசிசிஐ கௌரவித்துள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக விளங்குபவர் விராட் கோலி. தோனிக்கு பிறகு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கோலி தற்போது அனைத்து வகை போட்டிகளிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இன்று நடைபெற்று வரும் இலங்கை – இந்தியா டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடி வரும் நிலையில் இது அவரது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இதனை கௌரவிக்கும் வகையில் விராட் கோலிக்கு 100 எண் பொறித்த தொப்பியை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பரிசாக வழங்கியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் கோலியின் இந்த 100வது டெஸ்டை ஹேஷ்டேகுகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.