1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (13:02 IST)

ஜடேஜாவால் எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையா?... அஸ்வின் ஓபன் டாக்!

தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இவர் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட அழைக்கப்படுவதில்லை. ஆனால் இளம் வீரர்களுக்கு தன்னுடைய யுடியூப் சேனலின் மூலமாக பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதுபோல பல மூத்த வீரர்களை நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை வெளிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைக்காததற்குக் காரணம் ஜடேஜா அணியில் இருந்ததால்தானா என்ற கேள்விக்கு அவர் சிறப்பான பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் “எனக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போக ஜடேஜா காரணமல்ல. நான் விளையாடுவதற்காக அவரை அணியில் இருந்து வெளியே உட்காரவைக்க வேண்டும் என்ற பொறாமையும் எனக்கில்லை. பொறாமை என்பது நாம் அனைவரும் கடக்க வேண்டிய விஷயம். ஜடேஜா நான் பார்த்த திறமையான வீரர்களில் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.