வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:45 IST)

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை… தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!

தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இவர் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட அழைக்கப்படுவதில்லை. ஆனால் இளம் வீரர்களுக்கு தன்னுடைய யுடியூப் சேனலின் மூலமாக பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதுபோல பல மூத்த வீரர்களை நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை வெளிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தில் நீடிக்கிறார். 870 புள்ளிகளோடு அவர் முதலிடம் வகிக்க, ஹேசில்வுட் மற்றும் பும்ரா ஆகியோர் 847 புள்ளிகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.