ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2024 (08:30 IST)

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக் கூடாது… முன்னாள் பாகிஸ்தான் வீரரே இப்படி சொல்றாரே!

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இன்னும் குழப்பமான சூழலே நிலவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் தனிஷ் கனேரியா தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

அதில் “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக் கூடாது. பிசிசிஐ, சொல்வது போலவெ ஹைபிரிட் மாடலில் நடத்தலாம். ஐசிசி அதற்குதான் சம்மதம் தெரிவிக்கும் என நினைக்கிறேன். வெளிநாடுகளுக்கு ஒரு அணி, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அந்த வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் மற்றும் டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமை ஆகியவைக் கிடைக்குமென்பதை நான் புரிந்துகொள்கிறேன்.  ஆனால் பாகிஸ்தானில் இப்போதுள்ள அரசியல் சூழலில் இந்திய அணியை அழைக்காமல் இருப்பதுதான் நல்லது.” எனக் கூறியுள்ளார்.